தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இந்தியா என்பது உண்மை மற்றும் அகிம்சை... அமெரிக்க அதிபர் ஜோ பைடன்... - இந்தியா என்பது உண்மை மற்றும் அகிம்சை

இந்தியாவின் 76ஆவது சுதந்திர தினத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Biden says US and India are indispensable partners in Independence Day message
Biden says US and India are indispensable partners in Independence Day message

By

Published : Aug 15, 2022, 4:14 PM IST

வாஷிங்டன்:நாட்டின் 76ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. பல்வேறு உலக தலைவர்கள் தங்களது வாழ்த்து செய்தியை தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது வாழ்த்துகளை தெரிவித்துகொண்டார். அந்த வாழ்த்து செய்தியில், "சுதந்திரமான இந்தோ-பசிபிக் நாடுகளின் ஒற்றுமைக்காகவும், ஒத்துழைப்புக்காகவும் இந்தியாவுடன் அமெரிக்கா துணை நிற்கும். அமெரிக்காவுக்கு இந்தியா மிக நெருக்கமான கூட்டாளி நாடாகும்.

இரு நாடுகளுக்கிடையேயான கூட்டாண்மையானது அந்தந்த நாட்டு மக்களிடையே உள்ள ஆழமான பிணைப்பால் வலுப்பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 40 லட்சம் இந்திய-அமெரிக்கர்கள் உள்பட உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் தங்களது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில், அந்நாட்டின் ஜனநாயகப் பயணத்தை கௌரவிக்க அமெரிக்கா இணைகிறது.

இந்தியா என்பது உண்மை மற்றும் அகிம்சையாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். அதேபோல, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளின்கன், 76ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்திய மக்களுக்கு வாழ்த்துகள். இந்த முக்கியமான நாளில் ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கி வரும் இந்திய மக்களை மதிக்கிறோம்" என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:விளையாட்டு வீரர்கள் ஆதரிக்கவும் ஊக்குவிக்கவும் வேண்டும்... பிரதமர் மோடி...

ABOUT THE AUTHOR

...view details