தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அமெரிக்க ஆலோசனைக் குழுவில் 2 இந்திய வம்சாவளியினர் - Innovative Emergency Management

அமெரிக்காவின் தேசிய உள்கட்டமைப்பு ஆலோசனைக் குழுவில் 2 இந்திய வம்சாவளியினர் நியமிக்கப்பட உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

Etv Bharatஅமெரிக்க தேசிய ஆலோசனைக் குழுவிற்கு இந்தோ-அமெரிக்கர்கள் இருவர் நியமனம் - பைடன் அறிவிப்பு
Etv Bharatஅமெரிக்க தேசிய ஆலோசனைக் குழுவிற்கு இந்தோ-அமெரிக்கர்கள் இருவர் நியமனம் - பைடன் அறிவிப்பு

By

Published : Sep 1, 2022, 8:08 AM IST

வாஷிங்டன்: அமெரிக்காவின் தேசிய உள்கட்டமைப்பு ஆலோசனைக் குழுவில் இந்திய வம்சாவளியினரான மனு அஸ்தானா மற்றும் மது பெரிவால் ஆகியோர் நியமிக்கப்பட உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்த தேசிய உள்கட்டமைப்பு ஆலோசனைக் குழு, அந்நாட்டில் பொதுமக்கள் பாதுகாப்பு, சைபர் குற்றங்களை குறைத்தல், முக்கியமான உள்கட்டமைப்புத் துறைகளை பாதுகாத்தல், மேம்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து அமெரிக்க அதிபருக்கு ஆலோசனை வழங்கும்.

இதற்காக நிதி, போக்குவரத்து, எரிசக்தி, நீர், அணைகள், பாதுகாப்பு, தகவல் தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், சுகாதார சேவைகள், உணவு, விவசாயம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் சிறந்து விளங்கும் அனுபவமுள்ள நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். அந்த வகையில் மனு அஸ்தானா மற்றும் மது பெரிவால் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அஸ்தானா, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். வட அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய மின்சார பகிர்மான கழகமான PJM Interconnection LLC-இன் தலைவராக உள்ளார். மது பெரிவால், IEM நிறுவன தலைவராக உள்ளார். இந்த நிறுவனம் அமெரிக்காவில் உள்ள பெண்களின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் அவசரகால மேலாண்மை குறித்த விவகாரங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. .

இதையும் படிங்க:சோனியா காந்தியின் தாயார் மறைவு - பிரதமர் மோடி இரங்கல்

ABOUT THE AUTHOR

...view details