தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பெலாரஸ் நாட்டின் முன்னணி பத்திரிகையாளருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை!

அரசியல் எதிர்ப்பின் செயல்பாடுகளை உள்ளடக்கிய வகையில் தீவிரவாத நடவடிக்கையில் உடந்தையாக இருந்தததாக பெலாரஸ் நாட்டின் நீதிமன்றம் பத்திரிகையாளர் பவெல் மசீகாவுக்கு (Pavel Mazheika) ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உள்ளது.

பெலாரஸ் நாட்டின் முன்னணி பத்திரிகையாளருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
பெலாரஸ் நாட்டின் முன்னணி பத்திரிகையாளருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

By

Published : Jul 27, 2023, 12:06 PM IST

டாலின் (எஸ்டோனியா):பெலாரஸ் நாட்டில் ஒரு முன்னணி பத்திரிகையாளருக்கு நேற்று (ஜூலை 26) அந்நாட்டு நீதிமன்றம் ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உள்ளது. இது எதிர்கட்சி பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மீதான பல ஆண்டுகளாக ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.

பெலாரஸ் நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள உள்ள க்ரோட்னோ நகரில் நடைபெற்ற விசாரணையில், 45 வயதான பவெல் மசீகா அரசியல் எதிர்ப்பின் செயல்பாடுகளை உள்ளடக்கிய "தீவிரவாத நடவடிக்கைக்கு உடந்தையாக இருந்ததாக" குற்றம் சாட்டப்பட்டு உள்ளார்.

அண்டை நாடான போலந்தில் இருந்து பெலாரஷ்ய மொழியில் ஒளிபரப்பப்படும் பிரபல டிவி உள்ளிட்ட செய்தி நிறுவனங்களில் அவர் பணியாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. பெலாரஷ்ய அதிகாரிகள் பெல்சாட்டை "தீவிரவாதி" என்று முத்திரை குத்தி உள்ளனர். பெலாரஸின் அரசியல் கைதிகள், குறிப்பாக இந்த மாத தொடக்கத்தில் பெலாரஷ்ய சிறையில் இறந்த அலெஸ் புஷ்கின் மீது உள்ளிட்ட பெலாரஸ் அரசியல் கைதிகள் பற்றிய தகவல்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கறிஞர் யூலியா யுர்ஹிலிவிச்க்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

42 வயதான யுர்ஹிலிவிச், கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் சட்டப் பயிற்சி பெற்று, மனித உரிமை ஆர்வலர்களைப் பாதுகாத்து வந்த நிலையில், 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் அவரது உரிமம் பறிக்கப்பட்டுள்ளது. "இது விசாரணையே அல்ல, ஒரு அபத்த நடவடிக்கை. ஒரு பத்திரிகையாளர் மற்றும் ஒரு வழக்கறிஞர் தகவல்களைப் பரப்புவதற்காக விசாரிக்கப்படுகிறார்கள்" என்று மசீகா விசாரணையின்போது தெரிவித்து உள்ளார்.

மசீகா, பெலாரஸில் நன்கு அறியப்பட்ட நபர் ஆவார். 2002ஆம் ஆண்டில், அதிபரை அவதூறாகப் பேசியதற்காக அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 2006இல் ஜனாதிபதி வேட்பாளர் அலியாக்சாண்டர் மிலின்கேவிச்சின் செய்தித் தொடர்பு செயலாளராக பதவி வகித்து உள்ளார்.

மசீகா, பெலாரஸ் மற்றும் போலந்து ஆகிய இரு நாடுகளிலும் முன்னணி சுயாதீன செய்தி நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அவர், பிரபல டிவியின் நிர்வாக இயக்குநராகவும் பதவி வகித்து உள்ளார்.

2022ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தில் கைது செய்யப்பட்டதில் இருந்து 11 மாதங்கள் சிறைக் காவலில் இருந்து உள்ளார். முன்னதாக, அவர் காவலில் இருந்தபோது சட்ட அமலாக்க அதிகாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், அவர்கள் தனது கண்ணைப் பறிக்க முயன்றதாகவும் குற்றம் சாட்டி இருந்தார்.

பத்திரிகையாளர் பவெல் மசீகா மற்றும் வழக்கறிஞர் யூலியா யுர்ஹிலிவிச் மீதான தண்டனைக்கு, பெலாரஷ்ய எதிர்கட்சித் தலைவர் ஸ்வியட்லானா ஷிகான்வ்ஸ்கியா கண்டனம் தெரிவித்து உள்ளார். "இது உண்மையைப் பேசத் துணிந்தவர்கள் மீதான அப்பட்டமான தாக்குதல். பத்திரிகையாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் தங்கள் தொழிலை மேற்கொள்வதற்காக துன்புறுத்தப்படுகிறார்கள்" என அவர் குறிப்பிட்டு உள்ளார்.

பெலாரஸ் நாட்டின் ஜனாதிபதியாக அலெக்சாண்டர் லுகாஷென்கோ ஆறாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் பெலாரஸில் உள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் ஆர்வலர்கள், பெரிய அளவிலான அடக்குமுறையை எதிர்கொண்டு வருகின்றனர். எதிர்கட்சி மற்றும் மேற்கு நாடுகளால் மோசடி என்று நிராகரிக்கப்பட்ட தேர்தலைத் தொடர்ந்து, பெலாரஸ் நாட்டில பெரிய அளவிலான எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

35,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் சிறைக்காவலில் இருந்தபோது காவல் துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டனர். மேலும் 10க்கும் மேற்பட்ட அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சுயாதீன ஊடகங்கள் இந்த காலகட்டத்தில் மூடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வியாஸ்னா மனித உரிமை மையத்தின்படி, அங்கீகரிக்கப்பட்ட 1,481 அரசியல் கைதிகள் தற்போது பெலாரஸ் நாட்டில், சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தங்களது எஞ்சிய வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:மேல்படிப்புக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... அமெரிக்காவில் சிக்கிய மகளை மீட்க தாய் கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details