பெய்ஜிங்: சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பெய்ஜிங்கில் 5 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஒமைக்ரான் மாறுபாடு தொற்று பரவல் அதிகரித்துவருவதால், 5 நாள்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், நேற்று (மே 1) முதல் பெய்ஜிங் நகரில் உள்ள அனைத்து உணவகங்கள், திரையரங்குகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
பொது இடங்களுக்கு செல்ல கரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதோடு 50 விழுக்காட்டினருக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஷாங்காய் நகரில் 30 நாள்களுக்கும் மேலாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 2.5 கோடி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.