பார்பி படத்திற்கான சர்ச்சைகள் முடிந்தபாடில்லை. பார்பி படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டது முதல் பல பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது. ஹாலிவுட் திரையுலகின் செய்தியாளர் கூறுகையில், ”குவைத் நாடு சமீபத்தில் பார்பி படத்திற்கு தடை விதித்துள்ளது. முன்னதாக வியட்நாம் நாடு தடை விதித்திருந்தது.
சீனா தென் சீன கடலில் உள்ள பகுதியை ஆளுமைக்குக் கீழ் இருப்பதுபோல காட்டும் வரைபடம் பார்பி படத்தில் இடம் பெற்றிருப்பதால், வியட்நாம் நாடு அப்படத்திற்குத் தடை விதித்திருந்தது. மேலும் ஆசிய அரசியல் மோதலை அங்கீகரிக்கும் விதத்தில் பார்பி படத்தில் ஒரு காட்சி கேள்விகளை எழுப்புகிறது. வியட்நாம் நாட்டை போல் பிலிப்பைன்ஸ் நாடும் பார்பி படத்திற்கு தடை விதிக்க பரிசீலித்து வருகிறது.
லெபனான் சினிமா சென்சார் கமிட்டி தலைவர் லபி அல் சுபையி பார்பி படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில் 'பார்பி படம் சமூக மதிப்பை சிதைக்கிறது' எனக் கூறினார். இந்நிலையில் பார்பி திரைப்படம் லெபனான் நாட்டிலும் தடை செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:ஈக்வடார் நாட்டில் பயங்கரம் - தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் அதிபர் வேட்பாளர் சுட்டுக் கொலை!