கீவ் (உக்ரைன்): உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள பிரபல உணவகத்திற்கு பிரபலங்கள், முன்னணி பத்திரிகையாளர்கள் என முக்கிய நபர்கள் அதிகம் வருவது உண்டு. இந்த உணவகத்தை குறிவைத்து, ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், விருதுகள் பல வென்ற உக்ரைன் எழுத்தாளர் விக்டோரியா அமெலினா உள்ளிட்ட பலர் உயிரிழந்து இருப்பதாக, PEN அமெரிக்கா அமைப்பு தெரிவித்து உள்ளது.
இலக்கியவாதியாக திகழ்ந்த 37 வயதான அமெலினா, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு, ரஷ்யப் போர்க்குற்றங்களை ஆவணப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி, ரஷ்யப் படைகள், கிரமடோர்ஸ்க் பகுதியில் உள்ள உணவகம் மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அமெலினா உயிரிழந்ததாக, இலக்கியம் மற்றும் மனித உரிமைகள் அமைப்பு, ஜுலை 02ஆம் தேதி வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமெலினா உயிரிழந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து உள்ள உக்ரைன் நாட்டின் கலாசாரத் துறை அமைச்சர் ஒலெக்சாண்டர் கசென்கோ, இந்த தாக்குதலுக்கு, ரஷ்யா பொறுப்பேற்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார். "நமது மண்ணில் நடக்கும் ஒவ்வொரு குற்றத்திற்கும், பயங்கரவாதி கடுமையான தண்டனையை அனுபவிக்க வேண்டும்," என்று அவர் மேலும் குறிப்பிட்டு உள்ளார்.
அமெலினாவின் நண்பர்கள், சகாக்கள் மற்றும் அபிமானிகள் அவருக்கு இரங்கல் தெரிவித்து உள்ள பத்திரிகையாளர் ஓல்கா டோகாரியுக், அவளது ஆற்றல் நிறைந்த வாழ்க்கை, சோகங்களால் குறைந்து போய்விட்டது. "எத்தனையோ புத்தகங்கள் எழுதப்படாதவை, சொல்லப்படாத கதைகள், வாழாத நாட்கள்" என்று அவர் ட்வீட் செய்து உள்ளார்.
"விக்டோரியா, ரஷ்யர்களால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களை ஆவணப்படுத்தினார். அதுபோன்ற மற்றொரு போர்க்குற்றத்தில் அவர் கொல்லப்பட்டார். அவரது மரணத்திற்கும் உக்ரைனில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கானோரின் மரணத்திற்கும் நாங்கள் சாட்சி அளிக்கிறோம்" என்று வரலாற்று ஆய்வாளர் ஒலேஸ்யா க்ரோமேச்சுக் ட்வீட் செய்து உள்ளார்.
உணவகம் பிஸியாக இருந்த இரவு உணவு நேரத்தில் நடந்த தாக்குதலில் குறைந்தது 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் நடைபெற உதவியதாக, உக்ரேனிய அதிகாரிகள் ஒருவரை கைது செய்து உள்ளனர்.
அமெலினா கொலம்பிய எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் குழுவுடன் கிராமடோர்ஸ்க் நகரத்தில் தங்கி இருந்து, ட்ரூத் ஹவுண்ட்ஸ் என்ற மனித உரிமை அமைப்பில் சார்பில், ரஷ்யப் போர்க்குற்றங்களை ஆவணப்படுத்தி வந்தார். அமெலினாவின் உயிரிழப்பு செய்தியை, PEN உக்ரைன் அமைப்பு, அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்து உள்ளது.