மெல்போர்ன்: ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர இடது கை பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க். இவர் தனது குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுவதற்காகவும், சொந்த நாட்டிற்காக விளையாடுவதற்கு உடல் தகுதியுடன் இருப்பதற்காகவும் ஐபிஎல் போன்ற வெளிநாடுகளில் நடைபெறும் தொடர்களைத் தவிர்த்து வந்தார்.
33 வயதுடைய இவர் இரண்டு ஐபிஎல் தொடர்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடியுள்ளார். கடைசியாக 2015ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் விளையாடினார். இந்நிலையில், இவர் அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளதாக மிட்செல் ஸ்டார்க் அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவில் மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்குத் தயாராகும் விதமாக ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ளார். அதற்காக ஐபிஎல் ஏலத்தில் தனது பெயரைச் சேர்க்கவுள்ளார்.
இதையும் படிங்க:World Cup 2023: உலகக் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!