டெல் அவிவ்(இஸ்ரேல்):முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசனின் கீழ், மேற்கு ஜெருசேலம் நகரை இஸ்ரேலின் தலைநகராக மாற்றுவதற்கான அங்கீகாரம் வழங்குவது குறித்து எடுக்கப்பட்ட கொள்கை முடிவில் எவ்விதமான மாற்றங்களும் செய்ய முடியாது என அந்நாட்டு அரசு கடந்த அக்.17 ஆம் தேதி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மேற்கு ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் நிலைப்பாட்டை ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத் துறை கைவிட்டதாக, இதுகுறித்து இங்கிலாந்தின் 'தி கார்டியன்' என்ற பத்திரிக்கையில் செய்திகள் வெளியானது. இந்த செய்தி வெளியான சில மணிநேரங்களில், ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங்கிடமிருந்து இது குறித்து மறுப்பு தெரிவித்துள்ளதாகவும், முந்தைய அரசாங்கம் எடுத்த முடிவை திரும்பப் பெற திட்டவட்டமாக மறுத்துவிட்டதாக அவர் கூறியதாக, 'தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்' தெரிவித்துள்ளது.
ஜெருசலேமை தலைநகராக அமைப்பது தொடர்பாக, அரசாங்கம் தொடர்ந்து பரிசீலித்து வருகிறது என அமைச்சர் பென்னி வோங்கின் செய்தித் தொடர்பாளர் ஆஸ்திரேலியாவின் ஏபிசி நியூஸிடம் அளித்தப் பேட்டியில் கூறினார். மேலும், இந்த விவகாரத்தில் முந்தைய அரசாங்கம் எடுத்த முடிவில் எவ்விதமான மாற்றங்களையும் அரசு மேற்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக 2018 ஆம் ஆண்டில் அப்போதைய ஆஸ்திரேலியாவின் லிபரல் கட்சியின் பிரதமர் ஸ்காட் மோரிசனின் கீழ் கான்பெராவின் நடவடிக்கையை மாற்றியமைப்பதற்காக தொழிற்கட்சியும் உறுதியளித்து இருந்தது. அதே ஆண்டு எதிர்க்கட்சியாக இருந்தபோது, மத்திய இடசாரி லிபரல் கட்சி ஜெருசலேமை தலைநகராக மாற்ற அங்கீகாரம் வழங்க ஆதரவு ஏதும் தெரிவிக்கவில்லை என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா இஸ்ரேல் நாட்டுடன் நீண்ட காலமாக நட்புடன் இருந்து வருவதுடன் எப்போதும் தனது ஆதரவை வழங்கி வருவதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அமைச்சரவை இன்னும் இப்பிரச்சினையை பரிசீலிக்காததால் கொண்டுவரப்பட உள்ள மாற்றம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அந்நாட்டின் தொழிலாளர் சட்டம் இயற்றுபவரான ஜேசன் கிளேர், அந்நாட்டின் கல்வி அமைச்சர் ஆகியோர் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனிடையே ஜெருசலேமை தங்கள் தலைநகராக இஸ்ரேல், பாலஸ்தீனியர்கள் உரிமை கொண்டாடுகின்றனர். முன்னதாக, 1967-ல் ஆறு நாள் நடந்தப் போரில் ஜோர்டானிடமிருந்து கிழக்கு ஜெருசலேமைக் கைப்பற்றிய இஸ்ரேல், பின்னர் அங்கீகரிக்கப்படாத வகையில் தனது நாட்டுடன் இணைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு - மூன்றாவது முறையாக தலைவராகிறாரா ஜி ஜின்பிங்