பெய்ஜிங்:2022ஆம் ஆண்டிற்கான ஆசிய விளையாட்டுப்போட்டிகள் சீனாவின் ஹாங்ஷூ நகரில் வரும் செப்டம்பர் மாதம் நடக்க இருந்த நிலையில் கரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. உலக அளவில் நடைபெறும் பிரமாண்டமான போட்டிகளில் ஆசிய விளையாட்டுகளும் அடங்கும். ஒலிம்பிக் போட்டிகளைத் தொடர்ந்து அதிக நாடுகள் பங்கு பெறும் போட்டியாக ஆசிய விளையாட்டுப்போட்டிகள் இருந்து வருகின்றன.
கரோனாவால் ஆசிய விளையாட்டுகள் ஒத்திவைப்பு! - செப்டம்பர் 10 முதல் 25 வரை நடக்க இருந்த ஆசிய விளையாட்டுக்கள்
சீனாவில் ஹாங்ஷூ நகரில் செப்டம்பர் 10 முதல் 25 வரை நடக்க இருந்த ஆசிய விளையாட்டுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அங்கு கரோனா தீவிரமாகப் பரவி வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆசிய ஒலிம்பிக் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், 'கரோனா சீனாவில் அதிகமாகப் பரவி வரும் காரணத்தால், ஹாங்ஷூ நகரில் செப்டம்பர் 10ஆம் தேதி தொடங்கி 25 வரை நடக்க இருந்த 19ஆவது ஆசியப்போட்டிகள் ஒத்தி வைக்கப்படுகின்றன’ எனத்தெரிவிக்கப்பட்டிருந்தது. சீனாவின் செய்திகள் குறிப்பிலும் இது வெளியிடப்பட்டிருந்தது. மேலும் ஷாங்காய் நகரில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: அணு ஆயுதங்களை மேம்படுத்துகிறாரா கிம் ஜாங் உன்?