ஐதராபாத் :பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு. டெர்மினிட்டேர் என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவார். அதன்பின் தனது கட்டுடல் அழகால் பெண்கள் மட்டுமின்றி ஆண்களையும் கவர்ந்து இழுத்தவர் என்றும் கூறினாலும் மிகையல்ல. அந்தளவுக்கு பாடி பில்டிங் துறையில் உலகம் போற்றும் நபராக கோலோச்சியவர்.
இன்றளவும் பல்வேறு உடற்பயிற்சி கூடங்கள் அர்னால்டு பெயரிலும், அவரது புகைப்படங்களை விளம்பரப்படுத்தியும் இயங்கி வருகின்றன. பாடி பில்டிங் துறையை அடுத்து சினிமாவில் களம் பதித்த அர்னால்டு அதிலும் ஒரு ரவுண்டு வந்தார். தொடர்ந்து அரசியலில் கால்பதித்த அவருக்கு அதிலும் வெற்றியே.
கலிபோர்னியா மாகாணத்தின் ஆளுநராக பதவி வகித்தார். கடைசியாக இயக்குனர் ஷங்கர் - விக்ரம் கூட்டணியில் உருவான ஐ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிற்கு சென்னை வந்திருந்த அர்னால்டை காண ஆயிரக்கணக்கிலான ரசிகர்கள் குவிந்து திக்குமுக்காடச் செய்தனர். இந்நிலையில் தனது ஒரு ட்விட்டர் பதிவால் மீண்டும் அர்னால்டு பேசு பொருளாக மாறி உள்ளார்.
இதையும் படிங்க :மெகுல் சோக்சியை நாடு கடத்த தடை - ஆண்டிகுவா நீதிமன்றத்தால் இந்தியாவுக்கு பின்னடைவு!
லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் குடியிருக்கும் அர்னால்டு அங்கு குண்டு குழியுமாக இருக்கும் சாலை நண்பர்களுடன் இணைந்து சீரமைக்கும் வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். தற்போது இந்த பதிவு தான் சமூக வலைதளங்களில் வைரலாகி பேசு பொருளாக மாறி உள்ளது.
தன் ட்விட்டர் பக்கத்தில், "தன் வீட்டருகே இருந்த சாலை பள்ளத்தை சீரமைக்க கோரி புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் தானே குழு நண்பர்களுடன் சேர்ந்து சீரமைத்ததாக அர்னால்டு தன் ட்விட்டர் பதிவில் தெரிவித்து உள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அர்னால்டு வசித்து வரும் வீட்டின் அருகே சாலையில் உள்ள பள்ளத்தால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதனால் குழு நண்பர்களுடன் களத்தில் இறங்வ்கிய அர்னால்டு தார் கலந்த ஜல்லியை கொட்டி அந்த பள்ளத்தை சரி செய்தார். இதனிடையே அர்னால்டின் செயலை கண்ட பெண் அவரை வெகுவாக பாராட்டுகிறார். இதுதொடர்பான வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு "புகார் அளிப்பதை விடுத்து நீங்களே இறங்கி பிரச்சனையை சரி செய்யுங்கள்" என கருத்து தெரிவித்து இருந்தார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது. பல்வேறு தரப்பினரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் கலவையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். கலிபோர்னியா ஆளுநராக பதவி விலகிய பின் இது போன்ற தொண்டு பணிகளில் அர்னால்டு ஈடுபட்டு வருகிறார்.
இதையும் படிங்க :கர்நாடக தேர்தலில் களமிறங்கும் தேர்தல் மன்னன் பத்மராஜன்.. யாருக்கு எதிராக போட்டி தெரியுமா?