சான் பிரான்சிஸ்கோ: பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், அடுத்த ஆண்டில் ஆப்பிள் ஐபோன் 15 அல்ட்ரா 14 ப்ரோ மேக்ஸ் மாடலை வெளியிட உள்ளது.
இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வரப்போகும் "புரோ மேக்ஸ்" வரிசையை "அல்ட்ரா" என்றே மறு பெயரிடலாம். இது 8K வீடியோ மற்றும் சிறந்த பேட்டரி ஆயுளுடன் நன்கு உழைக்கும்.
மேலும், ஐபோன் 15 அல்ட்ரா சில பிரத்யேக வன்பொருளை கொண்டிருக்கும். அல்ட்ரா பிரத்யேகமாக பெரிஸ்கோப் லென்ஸுடன் (6x அல்லது 5x) , பேட்டரி ஆயுளை மேம்படுத்தி 3-4 மணிநேரம் நீடிக்கும்.
இந்த அனைத்து பிரத்யேக மேம்படுத்தல்களுடன், ஐபோன் 15 அல்ட்ராவானது 14 Pro Max உடன் ஒப்பிடும்போது விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது $1,200 ($1,100 இலிருந்து) தொடங்கும்.