கலிபோர்னியா:கடந்த 2 ஆண்டுகளாக புதிய iMac சீரிசஸை வெளியிடாத ஆப்பிள் நிறுவனம் நேற்று (அக். 31) வெளியிட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை 'ஸ்கேரி ஃபாஸ்ட்' நிகழ்வின் போது ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக், வெளியிட்டார்.
முன்னதாக தனது x வலைத்தளத்தில் இது குறித்து பதிவில் "புதிய மேக்புக் ப்ரோ வரிசையில் iMac ஐ அறிமுகப்படுத்துகிறோம். மேப்படுத்தபட்ட சிப்களை உருவாக்க தனிநபர் கணினி M3, M3 Pro மற்றும் M3 Max-க்கு ஹலோ சொல்லுங்கள் எனப் பதிவிட்டு இருந்தார்.
சிறப்பம்சங்கள்:கலிபோர்னியாவில் நடைபெற்ற ஸ்கேரி ஃபாஸ்ட்' நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவணம் புதிய iMac, லேப்டாப் மற்றும் மூன்றாம் தலைமுறை மேக் பிராசஸர் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட m3 வகை சிப்கள் கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தில் சிறப்பக செயல்படும் என ஆப்பிள் நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த M3 சிப்பின் பேசிக் மாடலில் எட்டு கோர்கள் கொண்ட பிராசஸிங் எஞ்சின் மற்றும் 10 கோர்கள் கொண்ட கிராபிக்ஸ்சை கொண்டுள்ளது. இதன் மாற்றொரு மாடலான M3 Pro பிராசஸிங் எஞ்சின் 12 கோர்களையும். கிராபிக்ஸுக்கு 18 கோர்கள் உள்ளன. M3 மேக்ஸை பொறுத்த வரையில் 16 கோர் பிராசஸிங் எஞ்சினும் 40 கோர் கிராபிக்ஸும் உள்ளன. இது கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான M1 சிப்பை விட 4 மடங்கு வேகமானது என்பது குறிப்பிடத்தக்கது.