காபூல்:ஆப்கானிஸ்தான் கயான் மாவட்டம், பாக்டிகா மாகாணத்தில் இன்று (ஜூன் 24) காலை 10 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. முதல் தகவலின் அடிப்படையில், 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் பலரது வீடுகள் இடிந்து சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு! - ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தான் பாக்டிகா மாகாணத்தில் இன்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்
முன்னதாக அங்கு கடந்த புதன்கிழமை (ஜூன் 22) ரிக்டர் அளவுகோலில் 5.9 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவாகியது. இதனால் கயான் மற்றும் பர்மால் மாவட்டங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டது. பாக்டிகா மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1100 பேர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க:ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 1000 பேருக்கும் மேல் உயிரிழப்பு