தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

துருக்கியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - துருக்கியில் இரண்டாவது நிலநடுக்கம்

துருக்கியின் கஹ்ராமன்மாராஸ் மாகணத்தில் 7.6 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Another fresh earthquake in Kahramanmaras Province in southern Turkey
Another fresh earthquake in Kahramanmaras Province in southern Turkey

By

Published : Feb 6, 2023, 4:39 PM IST

Updated : Feb 6, 2023, 5:17 PM IST

அங்காரா:துருக்கியின் கஹ்ராமன்மாராஸ் மாகணத்தில் உள்ள எல்பிஸ்தான் மாவட்டத்தில் 7.6 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இந்த புதிய நிலநடுக்கம் பிற்பகலில் எகினோஸூவிலிருந்து 4 கிமீ தென்-தென்கிழக்கே ஏற்பட்டுள்ளதாக யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முதலாவதாக நிலநடுக்கம் ஏற்பட்ட 12 மணி நேரத்திற்குள் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

முன்னாத ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 1,300 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளனர். 2,500 பேருக்கும் மேல் காயமடைந்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துருக்கில் மட்டும் 900 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்துவருகிறது. இந்த நிலையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கியின் பேரிடர் மற்றும் அவசரநிலை மீட்பு குழு கஹ்ரமன்மாராஸ் மாகாணத்தில் உள்ள பசார்சிக் நகரில் மீட்பு பணிகளை தொடங்கியது. ஐரோப்பிய ஒன்றியத்தில் பல நாடுகள் துருக்கிக்கு உதவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் நெதர்லாந்து, ருமேனியாவில் மீட்பு படையினர் துருக்கிக்கு அனுப்பட்டுள்ளனர். இந்த நிலநடுக்கங்கள் துருக்கின் மிகப்பெரிய பேரழிவு என்று அந்த நாட்டு குடியரசு தலைவர் ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:சிரியா, துருக்கியை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 600 பேர் பலி எனத் தகவல்

Last Updated : Feb 6, 2023, 5:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details