துருக்கி:துருக்கியின் மத்திய பகுதியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளி 6 ஆக நிலநடுக்கம் பதிவானதாக மத்திய தரைக்கடல் நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நேற்று(பிப்.6) மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நேற்று(பிப்.06) முதலில் 7.8 ரிக்டர் அளவிலும், இரண்டாவதாக 7.5 ரிக்டர் அளவிலும், மாலையில் மூன்றாவது முறையாக 6.0 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவானது. கடந்த இரு நாட்களில் மட்டும் துருக்கியில் 4 முறை நில அதிர்வு பதிவாகி உள்ளது. பூமி குலுங்கியதில் சீட்டு கட்டுகள் போல் கட்டடங்கள் இடிந்து விழும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. உயிரிழப்பு 5 ஆயிரத்தை நெருங்கிய நிலையில், தொடர் மீட்பு பணி நடைபெற்று வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் நிலவுகிறது. நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு மனிதாபிமான உதவிகளை இந்தியா மேற்கொண்டுள்ளது.