தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஜானி டெப்பிற்கு நஷ்ட ஈடாக 1 மில்லியன் தரவுள்ளார் ஆம்பெர் ஹெர்ட்! - jhonny depp Defamation Case

ஹாலிவுட் நட்சத்திர ஜோடியான ஜானி டெப் - ஆம்பெர் ஹெர்ட் வழக்கில், ஜானி டெப்பிற்கு நஷ்ட ஈடாக 1 மில்லியன் டாலரை ஆம்பெர் ஹெர்ட் வழங்கவுள்ளார்.

ஜானி டெப்பிற்கு நஷ்ட ஈடாக 1 மில்லியன் தரவுள்ளார் ஆம்பெர் ஹெர்ட்!
ஜானி டெப்பிற்கு நஷ்ட ஈடாக 1 மில்லியன் தரவுள்ளார் ஆம்பெர் ஹெர்ட்!

By

Published : Dec 20, 2022, 3:11 PM IST

Updated : Dec 20, 2022, 3:39 PM IST

ஹாலிவுட் நட்சத்திர ஜோடி ஜானி டெப் - ஆம்பெர் ஹெர்ட் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டி வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், ஆம்பெர் ஹெர்ட், தான் ஜானி டெப்க்கு வழங்க வேண்டிய நஷ்ட ஈடை நேற்று(டிச.19) தனது சமூகவலைதளத்தில் தெரிவித்து அளித்தார்.

ஆம்பெர் ஹெர்ட் தரப்பில் இருந்து 1 மில்லியன் டாலர் நஷ்ட ஈடாக, ஜானி டெப்பிற்கு ஏற்பட்ட நிதி நஷ்டத்திற்காக தரப்பட வேண்டுமென அவரது தரப்பினர் தெரிவித்தனர். மேலும், அந்தப் பணம் தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்படுமென ஜானி டெப் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து டெப் தரப்பு வழக்கறிஞர் குழு கூறுகையில், “நாங்கள் டெப் வாழ்க்கையின் இந்த துயர்மிகு பாகத்தை ஒரு வழியாக முடிவுக்கு கொண்டு வர நினைக்கிறோம். டெப் அவர்களின் முதன்மையான நோக்கமென்பது உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதாகத் தான் இருந்தது. டெப்பிற்கு ஆதரவாக நீதிபதிகள் ஒருமித்த முடிவெடுத்து அளித்த தீர்ப்பு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தனர். மேலும், நீதிபதிகள் நடிகர் ஜானி டெப்பிற்கு 10 மில்லியன் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென்றும், ஹெர்ட்-க்கு 2 மில்லியன் வழங்கப்பட வேண்டுமென்றும் தீர்ப்பளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அரிய நோயால் தவித்த வங்கதேச குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை - எய்ம்ஸ் சாதனை

Last Updated : Dec 20, 2022, 3:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details