தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஜானி டெப் மீது வன்கொடுமை வழக்கு- கோர்ட்டில் கதறி அழுத இரண்டாம் மனைவி! - pirates of the caribean

உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் மீதான அவரது இரண்டாம் மனைவி அம்பேர் ஹெர்ட் அளித்த அவதூறு வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

ஜாக் ஸ்பாரோ மீது வன்கொடுமை வழக்கு !- கோர்ட்டில் கதறி அழுத இரண்டாம் மனைவி!
ஜாக் ஸ்பாரோ மீது வன்கொடுமை வழக்கு !- கோர்ட்டில் கதறி அழுத இரண்டாம் மனைவி!

By

Published : May 6, 2022, 6:56 PM IST

நியூயார்க்(அமெரிக்கா):உலகம் முழுவதும் பிரபலமான டிஸ்னி திரைப்படங்களில் மிக முக்கியமானது ‘தி பைரட்ஸ் ஆஃப் தி கரிபியன்’. இத்திரைப்படம் மூலம் பிரபலமடைந்தவர் ஜானி டெப். இந்த திரைப்படத்தின் அனைத்து பாகங்களிலும் இவரே நடித்துக் கலக்கியிருப்பார். எப்போதும் தள்ளாடிய நடை, உடல் மொழி, திடீர் திடீரென மாறும் குரல் என அனைத்து விதத்திலும் ரசிக்க வைத்திருப்பார் ஜானி டெப்.

இவரது ’தி பைரட்ஸ் ஆஃப் தி கரிபியன்’ உலகின் பெரும்பாலான மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. தமிழில் 90’s கிட்ஸ்களின் ஹாலிவுட் தலைவனே இவர்தான். இவருக்கு டப் செய்த டப்பிங் கலைஞர்களும் அசத்தியிருப்பர். இந்நிலையில் இவர் கடந்த சில ஆண்டுகளாக எந்த படங்களிலும் நடிக்காமல் அவரது தொழில் நின்று போனது.

இவரது ஆக்டிங் கரியருக்கு முற்றிலுமாக தடையாய் இருந்தது இவரது இரண்டாம் மனைவி இவர் மீது தொடர்ந்த அவதூறு வழக்கே ஆகும். ஜானி 1983ஆம் ஆண்டி அன்னி அல்லிசன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் திருமணமான இரண்டாம் ஆண்டில் விவகாரத்து செய்து கொண்டனர். பின்னர் ஜானி 2015ஆம் ஆண்டு பிரபல நடிகை அம்பேர் ஹெர்டை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார்.

அம்பேர் ஹெர்டும், ஜானியை 2017ஆம் ஆண்டில் விவகாரத்து செய்தார். இதற்குப் பின்னர் 2018ஆம் ஆண்டு அம்பேர் அவரது முன்னாள் கணவர் ஜானி மீது திருமண பந்தத்தில் இருந்தபோது மோசமாகத் தாக்கியதாகப் புகார் அளித்தார். இந்த புகாருக்குப் பின் ஜானியின் திரைப்பட வாழ்க்கை மிகவும் மோசமானது. இதன் தொடர்ச்சியாக தன் மீது பொய்க் குற்றச்சாட்டு அளித்ததாகவும், மான நஷ்ட ஈடாக ரூ.350 கோடி கேட்டும் ஜானி டெப் வழக்கு ஒன்றைத்தொடர்ந்தார்.

தற்போது இந்த வழக்குகள் அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளன. வழக்கு விசாரணையின் போது இருவரும் ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். இந்த விசாரணை வீடியோக்கள் தற்போது அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

கன்னத்தில் அறைந்தாரா ஜானி?: நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அம்பேர் அவரை ஜானி முதன் முறையாக அறைந்ததை எடுத்துக் கூறினார். அப்போது அவர் அதைக் கூற முடியாமல் அழுதார். மேலும் ஜானியுடன் ஆஸ்திரேலியா சென்ற போது ஜானி அவரை கொடுமையாகத் தாக்கியதாகவும் தெரிவித்தார்.

இந்த வழக்குப் போடப்பட்டதிலிருந்து தற்போது வரை ஜானியின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அம்பேர் உண்மையாகத் தாக்கப்படவில்லை எனவும், ஜானி மீது அவதூறு பரப்பவே இந்த வழக்குத் தொடரப்பட்டது எனவும் பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த வழக்கின் தீர்ப்பு வந்தால் மட்டுமே உண்மையான குற்றவாளி யார் என்பது தெரியும் என்பதில் சந்தேகமில்லை.

இதையும் படிங்க:இந்தி பட வசூலை ஓரம்கட்டிய KGF -2

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details