கலிபோர்னியா: கலிபோர்னியா மாகாணத்தைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் Alphabet Inc என்ற தாய் நிறுவனத்தின் தேடு பொறியான கூகுள், AI செயற்கை நுண்ணறிவு உள்ள நிலையிலும், பல தரப்பட்ட மக்களால் பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுந்தர் பிச்சையின் சம்பள விவரத்தை, கூகுள் நிறுவனமே வெளியிட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளது.
இதன் அடிப்படையில், கடந்த 2022ஆம் ஆண்டு கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் சம்பளம் 226 மில்லியன் டாலர் ஆகும். இந்திய மதிப்பில் ஆயிரத்து 800 கோடி ரூபாய்க்கு மேல் ஆகும். இந்த ஊதிய விவரம் என்பது, கூகுளில் பணிபுரியும் இடைநிலை ஊழியரின் சம்பளத்தை விட 800 மடங்கு அதிகம் ஆகும் எனவும் தெரிய வந்துள்ளது.