இஸ்ரேல்:பாலஸ்தீனத்தை அடிப்படையாகக் கொண்ட ஹமாஸ் பயங்கரவாதிகள் குழு, இஸ்ரேலில் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தின. ஏறத்தாழ 5 ஆயிரம் ராக்கெட் தாக்குதல் இஸ்ரேலின் சர்ச்சைக்குரிய காசா உள்ளிட்ட பகுதியின் மீது நடத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏறத்தாழ மூன்றரை மணி நேரம் நடந்த இடைவிடாத தாக்குதலில் ஜெருசலேம், சர்ச்சைக்குரிய காசா உள்ளிட்ட நகரங்கள் தீக்கிரையாகி காட்சி அளிக்கின்றன. இந்த திடீர் தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. இஸ்ரேல் முழுவதும் அபாய ஒலிகள் ஒலிக்கப்பட்டு உள்ள நிலையில், அந்நாட்டு அரசு போர் நிலை சூழல் உருவாகி உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த திடீர் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூ, பாதுகாப்புத் துறையினருடன் அவசர ஆலோசனை மேற்கொண்டு உள்ளார். இரு நாட்டுக்கும் இடையே போர் நிலவும் சூழல் ஏற்பட்டு உள்ளதால், உலகளாவிய அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது.
மேலும், காசா பகுதியை ஒட்டிய இடங்களில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர வேண்டாம் என்று அரசு தரப்பி கூறப்பட்டுள்ளது. இஸ்ரேல் மீதான ஹமாஸ் பயங்கரவாதக் குழுவின் பலமுனை தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 300-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. மேலும் 1,590 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இவர்களில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், பாலிவுட்டின் பிரபல நடிகை நுஷ்ரத் பருச்சா இஸ்ரேலில் சிக்கியுள்ளார் என தெரிய வந்துள்ளது. இது பற்றி அவருடைய படக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் கூறும்போது, “துரதிர்ஷ்டவசத்தில் நுஷ்ரத் பருச்சா, இஸ்ரேலில் சிக்கிக் கொண்டார். ஹைபா சர்வதேச திரைப்படத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக அவர் இஸ்ரேலுக்குச் சென்றார்” என்றனர்.
கடைசியாக அவருடன் நேற்று மதியம் இந்திய தூதரகத்தின் உதவியுடன் 12.30 மணியளவில் படக்குழுவினர் தொடர்பு கொண்டுள்ளனர். அதன் பின்பு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனினும், அவர் இந்தியாவுக்கு பாதுகாப்பாக திரும்புவார் என படக்குழு உறுப்பினர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க:கன்னியாகுமரி தனியார் மருத்துவக் கல்லூரி முதுகலை மாணவி தற்கொலை.. சிக்கிய கடிதம்!