பெஷாவர்:பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சூடு நடந்தது.
இதில் 8 பயங்கரவாதிகள் சூட்டுக் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் நாட்டின் ஊடக பிரிவான இன்டர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ISPR) தெரிவித்துள்ளது. மேலும் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள், வெடி மருந்துகள், துப்பாக்கிகள் மற்றும் வெடி பொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கைபர் பக்துன்க்வா பகுதியில் எந்த ஒரு அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கேபியின் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ரஸ்மாக் பகுதியில் பாதுகாப்புப் படைகளின் வாகனத்தில் வெடி பொருள் வெடித்ததில் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர்.