இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் நாட்டின்பலுசிஸ்தான் மாகாணத்தில் நேற்றிரவு (செப் 25) ராணுவ ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 தளபதிகள் உள்பட 6 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். இதுகுறித்து அந்த நாட்டு ஊடகங்களின் தரவுகளின்படி, பலுசிஸ்தான் மாகாணம் ஹர்னாய் மாவட்டத்தில் நேற்றிரவு பணியின்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் தளபதிகள் உள்பட 6 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் ராணுவ தளபதிகள் உள்பட 6 வீரர்கள் உயிரிழந்தனர்.
Etv Bharatஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ தளபதிகள் உட்பட 6 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
இந்த விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இந்த ஹெலிகாப்டரை 39 வயதான மேஜர் குர்ரம் ஷாஜாத் (விமானி), 30 வயதான மேஜர் முஹம்மது முனீப் அப்சல் (விமானி) இருவரும் இயக்கினர். இந்த விபத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் வருத்தம் தெரிவித்து, அவர்களது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:இந்தியா உடன் அமைதியைத்தான் விரும்புகிறோம் - பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷரீஃப்