பெய்ஜிங்:சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள லூடிங் கவுன்டியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்திகள் வெளியிடுகின்றன. மக்கள் பீதியடைந்துள்ளனர்.
சீனாவில் 6.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது.
China
பாதிப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. சிச்சுவான் மாகாணத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு, 6.6 ரிக்டர் அளவிலும், 2008 ஆம் ஆண்டு 7.9 என்ற ரிக்டர் அளவில் அதிபயங்கர நிலநடுக்கமும் ஏற்பட்டது. திபெத்திற்கு அருகாமையில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Sep 5, 2022, 3:12 PM IST