வடகொரியா:வடகொரியா நாட்டில் கரோனா பரவலைத் தொடர்ந்து ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 6 பேர் கரோனவால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
வடகொரியாவில் மே 12 ஆம் தேதி ஒருவருக்கு கரோனா பாதிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று கரோனா பாதிப்பால் 6 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இதனையடுத்து நாட்டில் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே நாட்டின் கடல் வழி வானழி துறையில் பணிபுரியும் அதிகாரிகளை மிகவும் பாதுகாப்பாகவும், விழிப்புணர்வுடன் செயல்பட அதிபர் கிம் ஜாங் உத்தரவிட்டுள்ளார்.
வடகொரியா நாட்டில் கரோனா பரவலை தடுப்பதற்காக பல்வேறு வழிமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டின் தலைநகரான பியோங்யாங் பகுதியில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.அதிபர் கிம் ஜாங் கரோனா பரவலை அரசு கட்டுக்குள் வைக்கும் என உறுதியளித்துள்ளார் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அணுகுண்டுக்கே அசராத நாட்டில் ஊரடங்கு..!