கிறிஸ்தவர்களின் முக்கியத் திருவிழாவான ஈஸ்டர் பண்டிகை அன்று இலங்கையில் மிக முக்கியமான 8 இடங்களில் பயங்கரவாதிகள் தொடர் குண்டு வெடிப்பை நிகழ்த்தினர். இதில் 350-க்கும் மேற்பட்டோர் பலியாகினர், 500 பேர் படுகாயமடைந்தனர்.
இலங்கையில் மேலும் ஒரு இடத்தில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு! - Lanka bomb blast
கல்முனை: தொடர் குண்டு வெடிப்பையடுத்து நடத்தப்பட்ட சோதனையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள வெடிபொருட்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெடிபொருட்கள்
இந்நிலையில், இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், நாட்டின் பல பகுதிகளிலும் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டுவருகின்றன.
அதன்படி நேற்று காவல்துறையினர் மேற்கொண்ட வெடி குண்டு சோதனையில் கல்முனை நகரத்தில் 150 ஜெலட்டின் குச்சிகள், வெடிபொருட்கள், மற்றும் ட்ரோன் கேமராக்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் அங்குள்ள மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.