பெய்ஜிங்: சீனாவின் குவாங்டாங் மாகாண கடலோரப் பகுதிகளில் நேற்று முன்தினம் (ஜூலை 2) சபா என்னும் புயல் கரையை கடந்தது. இதனால் சுமார் 1 கிமீ தொலைவில் யாங்ஜியாங் நகருக்கு அருகே கடலில் நிறுத்தப்பட்டிருந்த மிதக்கும் கிரேன் கடலில் மூழ்கியது. இந்த கிரேனில் பணியாளர்கள், அலுவலர்கள் உள்பட 30 பேர் இருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த குவாங்டாங் கடலோர காவல்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
சீனாவில் மிதக்கும் கிரேன் மூழ்கியதில் 27 பேர் மாயம் - சீனா மிதக்கும் கிரேன் பலி எண்ணிக்கை
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் மிதக்கும் கிரேன் கடலில் மூழ்கியதில் 27 மாயமாகினர். மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் மூன்று பேர் மீட்கப்பட்டுள்ளனர். 27 பேர் கடலில் மாயமாகினர். இந்த மீட்பு பணியில் 38 மீட்புக் கப்பல்கள், 4 ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளன. இந்த கிரேன் கடலில் அமைக்கப்படும் காற்றாலைகளின் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டுவந்தது. சபா புயலின் போது இந்த கிரேனின் மூரிங் எனப்படும் பல்லாயிரக்கணக்கான எடை கொண்ட சங்கிலி உடைந்து சேதம் ஏற்பட்டு கடலில் மூழ்கியது முதல்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க:ஆஸ்திரேலியாவில் கனமழை... வெள்ளத்தில் மூழ்கிய சிட்னி...