காங்கோ: காங்கோவில் செயல்படும் மேற்கத்திய அமைப்புகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த காங்கோ ஆயுதப் படைகளுக்கும், மதப் பிரிவைச் சேர்ந்த ஆயுதப்படைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூரைச் சேர்ந்த அதிகாரிகள் தரப்பில் நேற்று (ஆகஸ்ட் 31) தெரிவிக்கப்பட்டது.
காங்கோவின் கிழக்கு நகரமான கோமாவில் நேற்றைய முன்தினம் (ஆகஸ்ட் 30) அதிகாலை கோமா நகர மேயரால் தடைசெய்யப்பட்ட ஒரு குறிப்பிட்ட போராட்டத்திற்காக வஸலெண்டோ ஆதரவாளர்கள் ஒன்று கூடி வன்முறையில் ஈடுபட்டனர்.
மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணி, பிற சர்வதேச அமைப்புகளுக்கு எதிராகக் காலனித்துவம் போன்ற அதிகாரத்தைப் பயன்படுத்துவதாகவும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது இராணுவத்தினர் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதே சமயத்தில் காங்கோ இராணுவம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு போலீசாரை கல்லால் தாக்கி கொன்றதாகக் கூறியுள்ளது. மேலும் ஆர்ப்பாட்டக்காரர்களில் 160 பேர் கைது செய்யப்பட்டதாகவும் இராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோதல் வெடித்த வடக்கு கிவு பிராந்தியத்தில் உள்ள சிவில் சமூகத்தின் துணைத் தலைவரான பிளாசிட் என்சிலம்பா (civil society vice president Placide Nzilamba) நேற்றைய மோதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், சுமார் 50 பேர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ள முதல்கட்ட விசாரணையைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோமாவின் மேயர் ஃபாஸ்டின் நபெண்டா கபென்ட் ஆகஸ்ட் 23 அன்று போராட்டம் அறிவிக்கப்பட்ட உடனேயே போராட்டத்திற்குத் தடை விதித்தார். நேற்றைய முன்தினம் (ஆகஸ்ட் 30) அதிகாலை 4 மணியளவில் வன்முறை வெடித்தபோது காங்கோ பாதுகாப்புப் படைகள் முக்கிய இடங்களில் பாதுகாப்பிற்காகக் குவிக்கப்பட்டன.
காங்கோவில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணி உட்பட இப்பகுதியில் செயல்படும் மேற்கத்திய அமைப்புகளைப் பிரிவு மதத் தலைவர் எப்ரைம் பிசிம்வாவின் தலைமையிலான குழு எதிர்க்கின்றனர், இது காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஐக்கிய நாடுகளின் அமைப்பின் உறுதிப்படுத்தல் பணி அல்லது MONUSCO என அழைக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணிகள் காங்கோவில் 1999 இல் செயல்படத் தொடங்கின. வடகிழக்கு பிராந்தியத்தில் மூன்று தசாப்தங்களாக மோதல்கள் 6 மில்லியனுக்கும் அதிகமான மக்களை இடம்பெயர்ந்துள்ளன, ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, 2021ஆம் ஆண்டு முதல் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. சிலர் இந்த ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணியானது கொடிய இலக்காக உள்ளது என்று விமர்சிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:Asia Cup 2023 SL VS BAN: வங்காள தேசத்தை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி..