கான்பரா:குயின்ஸ்லாந்து மாகாணம், வியம்பில்லா பகுதியில் பண்ணை வீடு ஒன்றில் ஒரு பெண் உள்ளிட்ட 3 பேர் அடங்கிய கும்பலிற்கும் போலீசாருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இரண்டு போலீசார், ஒரு பொதுமக்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
திடீர் துப்பாக்கிச்சூடு:நேற்று (டிச.12) அதிகாலை 4.45 மணியளவில் காணாமல்போன ஒருவர் பண்ணை வீட்டில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அவரை வியம்பில்லா என்ற பகுதியிலுள்ள பண்ணை வீட்டிற்கு முதலாவதாக 2 போலீசார் சென்றனர். இந்நிலையில், அந்த வீட்டிற்குள் முன்னதாக மறைந்திருந்த பெண் உட்பட்ட 2 கொண்ட கும்பல் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென துப்பாக்கிச் சூட்டில் இறங்கினர்.
இதனையடுத்து போலீசாரும் பதிலடிக்காக துப்பாக்கிச் சூட்டில் இறங்கினர். இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர். இதன் தொடர்ச்சியாக, போலீசார் இருவருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் அந்த கும்பலினர் துப்பாக்கியால் சுட்டதில் 2 போலீசாரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனிடையே, இந்த துப்பாக்கி சத்தத்தைக் கேட்டு அங்கு சென்ற அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரையும் அக்கும்பல் துப்பாக்கியால் சுட்டதில், அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து அங்கு விரைந்து வந்த பிற போலீசாரும் அந்த பண்ணை வீட்டிற்குள் சென்று நடந்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து வீட்டிற்குள் மறைந்திருந்த அக்கும்பல், மீண்டும் வெளியே வந்து போலீசாருடன் துப்பாக்கியால் சுட்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இதனையடுத்து பதில் நடததிய போலீசாரும் அந்த மூன்று பேரையும் சுட்டு வீழ்த்தினர்.