மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவின் ஹிடால்கோ நகரில் இருந்து மான்டேரியை நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து தமௌலிபாஸ் அருகே எதிரி வந்த எரிபொருள் டேங்கர் லாரி மீது மோதியது. இந்த விபத்தில் டேங்கரில் இருந்த எரிபொருள் வெடித்து தீ பற்றியது. இதனால் டேங்கர் லாரியும், பேருந்தும் தீ பிடித்து எரிந்தன. இதன்காரணமாக 18 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த தமௌலிபாஸ்போலீசார் தீயணைப்பு துறையுடன் சம்பவயிடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர்.
பேருந்து மீது எரிபொருள் டேங்கர் லாரி மோதியதில் 18 பேர் உயிரிழப்பு - எரிந்த உலோகமாக பேருந்து
மெக்சிகோவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி பயணிகள் பேருந்து மீது மோதி தீ விபத்து ஏற்பட்டதில் 18 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து போலீசார் தரப்பில், இந்த விபத்துமான்டேரி நெடுஞ்சாலையில் அதிகாலை நடந்துள்ளது. லாரி ஓட்டுநர் உயிர் பிழைத்துள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. பேருந்தில் பயணித்த மொத்த நபர்களின் எண்ணிக்கை 20-க்கும் அதிகமாக உள்ளது. அதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும். இந்த லாரி இரட்டை கொள்கலனை கொண்டாதால் உந்துவிசை காரணமாக கட்டுப்பாட்டை இழந்து பேருந்துமீது மோதியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பீரங்கிகள் முழங்க ராஜாவாக பதவியேற்றார் மூன்றாம் சார்லஸ்..!