தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஆப்பிரிக்காவில் இசை கச்சேரியில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு - music concert in Kinshasa

ஆப்பிரிக்காவின் கின்ஷாசாவில் நடந்த இசை கச்சேரியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 11 பேர் உயிரிழந்தனர்.

ஆப்பிரிக்காவில் இசை கச்சேரியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு
ஆப்பிரிக்காவில் இசை கச்சேரியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு

By

Published : Oct 31, 2022, 8:21 AM IST

கின்ஷாசா:ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நாட்டின் தலைநகர் கின்ஷாசாவில் நேற்று (அக். 30) அந்நாட்டின் முன்னணி இசைக்கலைஞரான ஃபாலி இபுபாவின் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெற்றுகொண்டிருந்தது. அப்போது 80,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் மைதானத்தில் குவிந்தனர். அந்த நேரத்தில் டிக்கெட்டுகள் வரிசை தொடர்பாக ரசிகர்களுக்கு இடையே போட்டி ஏற்பட்டு மைதானத்திற்குள் முண்டி அடித்துக்கொண்டு நுழைய முயன்றனர். அப்போது பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

பாதுகாப்பு அதிகாரிகள் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர். இருப்பினும் நெரிசலில் சிக்கி11 பேர் உயிரிழந்தனர். முன்னதாக தென் கொரியாவில் நடைபெற்ற ஹாலோவின் திருவிழாவில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 151 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அக்.29ஆம் தேதி சியோலில் உள்ள இட்டாவோனில் நடந்தது.

இதையும் படிங்க:ஹாலோவீன் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 151 பேர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details