நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரம் பஃப்பல்லோவில் உள்ள சூப்பர்மார்க்கெட் ஒன்றில் நேற்று (மே 14) நுழைந்த இளைஞர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த தாக்குதலில் பொதுமக்கள் 10 பேர் உயிரிழந்தனர். மூன்று பேர் படுகாயமடைந்தனர். இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞரிடம் பேச்சுவார்த்தை நடத்தி துப்பாக்கியை வாங்கிக் கொண்டு, பிறகு கைது செய்தனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்
சூப்பர் மார்க்கெட்டில் இளைஞர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலி - இனவெறி காரணமாக தாக்குதலா? - அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம்
பஃப்பல்லோ நகரத்தில் உள்ள சூப்பர்மார்க்கெட்டில் இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். மூன்று பேர் காயமடைந்தனர். இளைஞர் இனவெறி காரணமாக இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், 18 வயதான அந்த இளைஞர், சுமார் 300 கிலோ மீட்டர்கள் காரில் பயணம் செய்து பஃப்பல்லோ நகருக்கு வந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளார் என்றும், கருப்பின மக்கள் அதிகம் வாழும் நகரில் குறிவைத்து அவர் தாக்குதல் நடத்தியுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. தாக்குதல் நடத்திய இளைஞர் வெள்ளையர் என்றும், நிறவெறி காரணமாக இந்த தாக்குதலை செய்திருக்க கூடும் என்றும் போலீசார் தெரிவித்தனர். இவர் துப்பாக்கியால் சுட்டவர்களில் 8 பேர் கருப்பின மக்கள் என்றும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் 2022-ம் ஆண்டில் மட்டும் தூப்பாக்கிச்சூடு சம்பவங்களில் சுமார் 28 ஆயிரம் பேர் தாக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: அமீரகத்தின் புதிய அதிபர் ஷேக் முகம்மது பின் ஸாயித் அல் நஹ்யான்!