Yemeni Civil War: இதுதொடர்பாக ஐ.நா. வளர்ச்சித் திட்டம் வெளியிட்டிருந்த அறிக்கையில், "ஏமன் உள்நாட்டுப் போர் 2022ஆம் ஆண்டு வரை தொடர்ந்து நீடித்தால், அந்நாடு உலகின் மிக ஏழ்மையான நாடு என்ற அவல நிலைக்குத் தள்ளப்படும். ஏமனில் 79 விழுக்காடு மக்கள் ஏழ்மை கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வருகின்றனர். 65 விழுக்காடு மக்கள் மிகவும் ஏழ்மையானவர்கள் பட்டியலில் உள்ளனர்" எனக் கூறப்பட்டுள்ளது.
Yemeni Civil War: ஏழ்மையை நோக்கி ஏமன்? - ஐ.நா. அதிர்ச்சித் தகவல்! - ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்
சானா: ஏமன் உள்நாட்டுப் போர் 2022ஆம் ஆண்டு வரை தொடர்ந்து நீடித்தால், உலகின் மிக ஏழ்மையான நாடு என்ற அவல நிலைக்கு அந்நாடு தள்ளப்படும் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.
![Yemeni Civil War: ஏழ்மையை நோக்கி ஏமன்? - ஐ.நா. அதிர்ச்சித் தகவல்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4714400-thumbnail-3x2-yemen.jpg)
yemen
ஏமன் அரசுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2014ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நிலவிவருகிறது. ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி தலைமையிலான கூட்டுப் படையினர் களமிறங்கியுள்ளனர். இந்த உள்நாட்டுப் போரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதையும் வாசிங்க: 'ஹவுத்திகளின் போர் நிறுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது' - ஐநா