உலகளவில் வெப்பநிலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. பல இடங்களில் பனிப்பாறைகள் உருகி வருகின்றது. இதன் விளைவாக, கடல் மட்டம் உயர்ந்து பல கடற்கரையோரப் பகுதிகள் நீரினுள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அப்படி ஒரு சம்பவம் தான், பூமியின் தென் பகுதியில் உள்ள மிகப்பெரிய அண்டார்டிகாவில் சமீபத்தில் நிகழ்ந்துள்ளது. சுமார் 4,320 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட ராட்சத பனிப்பாறை, தனியாகப் பிரிந்து கடலில் மிதக்கத் தொடங்கியுள்ளது.