உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. வைரஸ் தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதில் பல முன்னணி நாடுகளின் விஞ்ஞானிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
அந்த வகையில், ஐக்கிய அரபு அமீரகம் கரோனாவுக்கான தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த மருந்து மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளதாக, அந்நாட்டு சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இன்று(ஜூலை 17) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சீனத் தூதர் நி ஜியான் முன்னிலையில் முறைப்படி மூன்றாம் கட்ட பரிசோதனை தொடங்கியது. அப்போது, மூத்த சுகாதாரத் துறை அலுவலர்கள், ஜி 42 ஹெல்த்கேர், சினோபார்ம் சிஎன்பிஜி பிரதிநிதிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த குழுவினர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திகொண்டனர். இந்த ஆய்வு வெற்றிகரமாக இருந்தால், அபுதாபியின் எமிரேட்ஸ் அறிவியல் ஆராய்ச்சிக்கான நெறிமுறைகள் குழுவால் அங்கீகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.