ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்ப வேண்டும் என்ற நோக்கத்தில் தலிபான் பயங்கரவாத அமைப்புடன் அமெரிக்க பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டது. இது தொடர்பாக கத்தார் தலைநகர் தோஹாவில் இரு தரப்பினருக்கிடையே அவ்வப்போது ஆலோசனை நடத்தப்பட்டது. இந்நிலையில், அடுத்தகட்ட பேச்சுவார்த்தை ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை தோஹாவில் நடைபெற உள்ளது. இதில் 150க்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் அரசு பிரநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தையில் இடம்பெறும் பெண்கள்! - afghanistan
காபூல்: ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பான பேச்சுவார்த்தையில் பெண்கள் இடம்பெறுவார்கள் என தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.
அமைதி பேச்சுவார்த்தையில் இடம்பெறும் பெண்கள்
இந்த பேச்சுவார்த்தையில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண்கள் கலந்து கொள்வார்கள் என தலிபான் அமைப்பின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.