சிரியாவில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர். மேலும், பலர் ஐரோப்பிய, துருக்கி, லெபனன் உள்ளிட்ட அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்த நிலையில், துருக்கியில் வசிக்கும் சிரிய அகதிகளை அவர்களின் சொந்த நாட்டிற்கு திரும்பி அனுப்பவுள்ளதாக அந்நாட்டின் அதிபர் டயீப் எர்டோகன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசுகையில், " துருக்கியில் உள்ள பத்து லட்சம் சிரிய அகதிகளை அந்நாட்டிற்கு திருப்பி அனுப்பவுள்ளோம். தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக இருபது லட்சம் அகதிகளை சிரியாவிற்கு அனுப்பவுள்ளோம்" என்றார்.