தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அமெரிக்கா போர் விமானம் கடலில் விழுந்து விபத்து - விமானியை தேடும் பணியில் பிரிட்டன்! - பிரட்டன் கடற்படை

லண்டன் : ராயல் விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட அமெரிக்காவின் F-15C போர் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குளானதால் தேடுதல் பணியில் பிரிட்டன் மீட்பு படையினர் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

flight
flight

By

Published : Jun 15, 2020, 11:55 PM IST

லக்கன்ஹீத் ராயல் விமானப்படை தளத்தில் அமெரிக்க விமானப்படையின் 48ஆவது போர் பிரிவு செயல்படுகிறது. இது லிபர்ட்டி விங் என அழைக்கப்படுகிறது‌. இந்த விமானத் தளம் லண்டனுக்கு வடகிழக்கிலிருந்து 80 மைல் (130 கிலோமீட்டர்) தொலைவில் உள்ளது. இங்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பயிற்சியில் உள்ளனர்.

இந்நிலையில், இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த F-15C ஈகிள் போர் விமானம் காலை 9 மணியளவில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானியை தேடும் பணியில் பிரிட்டன் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். விபத்து எற்பட்டதற்கான காரணங்கள் குறித்து தகவல்கள் வெளிவரவில்லை.

இதுகுறித்து பிரட்டன் கடற்படை வெளியிட்ட அறிக்கையில், " யார்க்ஷயர் கடற்கரையில் ஃபிளாம்பரோ ஹெட் பகுதியிலிருந்து 74 கடல் மைல் தொலைவில் விமானம் கீழே விழுந்துள்ளதாக முதல்கட்ட தகவலில் தெரிந்துள்ளது. தற்போது, அப்பகுதியில் ஹெலிகாப்டர், லைஃப் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன" எனக் குறிப்பிட்டிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details