ஈரான் நாட்டின் முக்கிய தளபதி காசிம் சுலைமானி, அமெரிக்க ராணுவம் நடத்திய ஆளில்லாத விமான தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இதுதொடர்பான காணொலிக் காட்சிகள் வெளியாகி, ஈரான் நாட்டை அமைதி இழக்க செய்தது. அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கொந்தளித்தனர்.
இதற்கு அமெரிக்கா மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும் என்றும் அவர்கள் எச்சரித்தனர். இந்நிலையில் ஈரானில் கடந்த 8ஆம் தேதி, உக்ரைன் பயணிகள் விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது..
இதில் விமானத்தில் பயணித்த 176 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது விபத்து இல்லை, ஈரானின் திட்டமிட்ட தாக்குதல் என்று அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கூறிவந்தனர்.