கரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகளில் மற்ற நாட்டு குடிமக்கள் தங்களது நாட்டிற்குள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. பல சர்வதேச விமானங்களும் ரத்துசெய்யப்பட்டுள்ளன. அனைத்து விதமான பொது நிகழ்ச்சிகளும் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் உள்ள மனிதவளம் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் (Ministry of Human Resources and Emiratisation) தங்களது நாட்டில் பணிபுரிய வரும் ஓட்டுநர், வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கான அனுமதியை தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.