கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் நாசர் நந்தி. துபாயில் வசித்து வந்த இவர், அங்கு பணியாற்றும் இந்தியர்களுக்கு, மனிதாபிமான உதவிகளை செய்துவந்தார். அரபு நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள், ஏதாவது ஒரு காரணத்தால் இறந்தால், அவர்களது உடல்களைச் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால், அங்கேயே அடக்கம் செய்வதற்கான உதவிகளை செய்து வந்தார்.
சமூக ஆர்வலர் நாசர் நந்தி துபாயில் மரணம்! - UAE social worker from Kerala Nazar Nandi passes away
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்த கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலரான நாசர் நந்தி, மாரடைப்பால் காலமானார்.

நாசர் நந்தி
கடவுச்சீட்டு பிரச்னையால் பாதிக்கப்படும் இந்தியர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்த நாசர் நந்திக்கு, நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து துபாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.