தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சிரிய வான்வழித் தாக்குதலில் இருவர் பலி: மீட்புப் பணிகள் தீவிரம் - சிரிய வான்வழித் தாக்குதல்

இதிலிப்: சிரிய ராணுவம் பனீன் கிராமத்தில் நடத்திய வான்வழித் தாக்குதலில் இடிபாடுகளில் சிக்கிய இருவர் உயிரிழந்துள்ளனர்.

syrian air raid

By

Published : Aug 22, 2019, 11:10 PM IST

சிரிய நாட்டில் நிலவிவந்த உள்நாட்டுப் போரில் அந்நாட்டு அரசாங்கம் போர் விமானங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.

இதையடுத்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க அந்நாட்டின் உள்நாட்டு போர் மீட்புக் குழுவினர் விரைந்தனர். ஆனால் இடிபாடுகளில் சிக்கிய இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், அல்கொய்தா தீவிரவாத அமைப்பிற்குட்பட்ட ஹயத் தாஹீர் அல்சம் என்ற அமைப்பு பனீன் கிராமத்தை முற்றிலுமாக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பேசிய பிரிட்டனை மையமாகக் கொண்ட சிரிய கண்காணிப்பகம், பனீனுக்கு தெற்கே உள்ள ஷெய்கவுன் பகுதியிலிருந்து ஹயத் தாஹீர் அல்சம் அமைப்பினர் விலகியுள்ளனர்.

ஷெய்கவுன் பகுதியை கைப்பற்றியதைத் தொடர்ந்து, மாரெட் அல் நுமன் எனும் பகுதிக்கு கிளர்ச்சியாளர்கள் சென்றிருக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details