துருக்கியின் கடற்கரையோர நகரமான இஸ்மிரில் கடந்த அக். 30ஆம் தேதி, சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் நகரத்திலுள்ள பல அடுக்குமாடி குடியிருப்புகள் நிலைக்குலைந்தன. இந்த நிலநடுக்கத்தின், அளவு 7.0 ஆக மதிப்பிடப்பட்டது.
துருக்கி நிலநடுக்கம் - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 102ஆக உயர்வு! - துருக்கி நிலநடுக்க உயிரிழப்பு
அங்காரா: துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 102ஆக உயர்ந்துள்ளது.
Turkish quake
இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளவர்களை, மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இந்த நிலையில், நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 102ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 961 பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:துருக்கி, கிரீஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு