மத்திய கிழக்கு நாடான சிரியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் தொடர்ச்சியாக நடைபெற்றுவந்த நிலையில், தற்போது அங்கு சர்வதேச நாடுகளின் போர்க்களமாக அது உருவாகியுள்ளது.
சிரியாவின் அரசுக்கு நெருக்கமாக உள்ள ரஷ்யா அங்குள்ள உள்நாட்டுக் கிளர்ச்சியாளர்களை ஒடுக்கு அந்நாட்டு ராணுவத்திற்கு உதவிவருகிறது. இதன் காரணமாக அங்கு போர் அகதிகள் அண்டை நாடான துருக்கி எல்லையில் முகாமிட்டுவருகின்றன.
தங்கள் நாட்டு பாதுகாப்புக்கு இது சிக்கலை ஏற்படுத்துகிறது எனக் குற்றஞ்சாட்டியுள்ள துருக்கி, ரஷ்யாவுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துவருகிறது. மேலும், சிரிய எல்லையில் ராணுவத்தைக் குவித்துள்ள துருக்கி, சிரிய படைகள் மீது வான்வழித் தாக்குதல் நடத்திவருகிறது.