தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

துருக்கியில் 304 ராணுவ வீரர்களைக் கைது செய்ய உத்தரவு! - துருக்கி அரசின் தலைமை வழக்கறிஞர்

அங்காரா: துருக்கி நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு சதிச்செயலில் ஈடுபட்டதாக 304 ராணுவ வீரர்களைக் கைது செய்ய துருக்கி அரசின் தலைமை வழக்கறிஞர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

turkey
turkey

By

Published : Dec 8, 2020, 6:53 PM IST

துருக்கியில் கடந்த 2016ஆம் ஆண்டு அதிபர் தாயீப் எர்டோகனின் ஆட்சியைக் கவிழ்க்க அமெரிக்காவுடன் இணைந்து துருக்கியைச் சேர்ந்த கல்வியாளர் பெதுல்லா குலென் மற்றும் ராணுவத்தில் ஒரு பிரிவு சதிவேலையில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது.

ஆனால் துருக்கி அரசைக் கவிழ்க்கும் முயற்சி முறியடிக்கப்பட்டது. இந்தச் சதிச்செயலின்போது 250 பேர் கொல்லப்பட்டனர். பின்னர் பெதுல்லா குலென் நாடு கடத்தப்பட்டார்.

இதில் தொடர்புடையதாகக் கருதப்படும் ராணுவ அலுவலர்கள், காவலர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

இதனைத்தொடர்ந்து இந்தச் சதிச்செயல் ஈடுபட்டதாக 198 ராணுவ வீரர்களைத் துருக்கி அரசு கைது செய்தது. இந்நிலையில் மேலும் 304 ராணுவ வீரர்களைக் கைது செய்யத் துருக்கி அரசின் தலைமை வழக்கறிஞர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details