துனிசியா நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியல் குழப்பம் நீடித்துவருகிறது. அந்நாடு பெரும் பொருளாதார நெருக்கடியிலும் சிக்கித் தவித்துவருகிறது.
கடந்த ஜூலை மாதம் அதிபர் கைஸ் சயீத் முந்தைய அரசை கலைத்து உத்தரவிட்டார். நான்கு மாதங்களாக புதிய அரசு அமைக்கும் முயற்சியில் அதிபர் கைஸ் ஈடுபட்டுவந்த நிலையில், தற்போது புதிய பிரதமராக போடன் ரோம்தானே நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்நாட்டின் முதல் பெண் பிரதமர் இவர் ஆவார். 63 வயதான ரோம்தானே உலக வங்கியில் பணியாற்றியுள்ளார். நாட்டின் பத்தாவது பிரதமராக பொறுப்பேற்கும் இவர் அங்கு நிலவும் பொருளாதார சிக்கலை தீர்த்து வைப்பதை பிரதான நோக்கமாக கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார். நாட்டை சமூக, பொருளாதார சிக்கலில் இருந்து மீட்பதே லட்சியம் என அதிபர் கைஸ்சும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:எங்கள் பகுதியில் ட்ரோன் பயன்படுத்த கூடாது - அமெரிக்காவுக்கு தாலிபான் எச்சரிக்கை