பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்க கப்பல்களை, ஈரானைச் சேர்ந்த பீரங்கிக் கப்பல்கள் தாக்கினால் அவற்றை சுட்டு வீழ்த்த தங்கள் நாட்டு கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை பாரசீக வளைகுடாவில் அமெரிக்க போர்க் கப்பல்களுடன் பதற்றமானதொரு சூழலில் சந்திப்பு ஏற்பட்டதாகவும், ஆனால் இதுகுறித்து எந்த விளக்கமும் பெறாமல் அமெரிக்க அரசு இதை பூதாகரமாக்கிவிட்டதாகவும் ஈரானிய படைப் பிரிவுகளில் ஒன்றான ரெவல்யூஷனரி கார்ட் தெரிவித்துள்ளது.