ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து, 2018ஆம் ஆண்டு அமெரிக்கா விலகியது. தொடர்ந்து, அந்நாட்டின் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துவருகிறது. இதனால், இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் தொடர்கதையாகிவிட்டது.
'எங்களால் இவ்வளவுதான் முடியும்' - ஈரான் அதிபர் - JCPOA
தெஹ்ரான்: அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் வலுத்துவரும் நிலையில், ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து பகுதி விலகுவதே தங்களால் முடிந்த குறைந்தபட்ச நடவடிக்கை என அந்நாட்டு அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கடந்த மாதம், ஈரானிடம் எண்ணெய் வாங்க இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அளித்திருந்து தற்காலிக அனுமதியை அமெரிக்க திரும்பப்பெற்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து தாங்கள் பகுதி விலகுவதாக ஈரான் அரசு அறிவித்து.
இது தொடர்பாக ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி பேசுகையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த எங்களுக்கு அழுத்தம் கொடுக்கு முடியாது என தெரிவித்தார். மேலும், அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து பகுதி விலகுவதே, தங்களால் முடிந்த குறைந்த பட்ச நடவடிக்கை எனவும் அவர் கூறினார்.