இது குறித்து ஈராக் உள்துறை அமைச்சர் கஸிம் அல்-அராஜி ஜிங்ஹுவான், தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "பாக்தாத்தின் வடகிழக்கில் உள்ள அல்-ஷாப் பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது குண்டி வைத்து வெடிக்கச் செய்ததில், ஆறு பேர் கொல்லப்பட்டனர், ஒன்பது பேர் காயமடைந்தனர்.
இதேபோன்று, தென் மேற்கு பகுதியில் உள்ள அல்-பையாவில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் நான்கு பேர் காயமடைந்தனர். மேலும், அல்-பாலா தியாத் பகுதியில் நிகழ்ந்த மற்றொரு வெடி விபத்தில் நான்கு பேர் காயமடைந்தனர்"என்றார்.