கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாட்டுகளால் பல்லாயிரக்கணக்கானோர் வேலையிழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இச்சமயத்தில் தான் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கரோனா நடவடிக்கைகள் என்ற பெயரில் ஊழல் செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
"நீங்க 'பிரைம்' மினிஸ்டர் அல்ல; 'கிரைம்' மினிஸ்டர்" - பிரதமரின் வீட்டை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்! - கரோனா வைரஸ்
ஜெருசலேம்(இஸ்ரேல்): பிரதமரின் வீட்டை திடீரென்று ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால், காவல் துறைக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
!["நீங்க 'பிரைம்' மினிஸ்டர் அல்ல; 'கிரைம்' மினிஸ்டர்" - பிரதமரின் வீட்டை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்! protest](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-03:04:10:1594805650-8032994-677-8032994-1594799785243.jpg)
protest
இதன் காரணமாக, கடந்த சில நாள்களாகப் பல பகுதிகளில் இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக போராட்டம் நடைபெற்ற நிலையில், நேற்று(ஜூலை 14) பிரதமரின் இல்லத்தின் முன்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் சூழ்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்நாட்டின் பிரதமரை ’நீங்கள் ப்ரைம் மினிஸ்டர் அல்ல; கிரைம் மினிஸ்டர்' என விமர்சித்து முழக்கமிட்டுள்ளனர்.
பிரதமரின் வீட்டை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்!
ஒரு கட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், காவலர்கள் கூட்டத்தை கலைக்க முற்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.