பொருளாதாரத் தடைகள் காரணமாக மத்திய கிழக்கு நாடான சிரியாவில் ஏற்கனவே எண்ணெய் பற்றாக்குறை நிலவிவரும் சூழலில், இந்தத் தாக்குதலானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளில்லா விமானங்கள் மூலம் ஒரே சமயத்தில் இந்த தாக்குதலானது நடத்தப்பட்டிருக்க வேண்டும் என நம்பப்படுவதாக சனா செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தத் தாக்குதலால் எண்ணெய் உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கும் அந்நாட்டு எண்ணெய் அமைச்சகம், தாக்குதலால் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டு சீரமைப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக கூறியுள்ளது.
2011ஆம் ஆண்டு முதல் சிரியாவில் உள்நாட்டுப் போர் நிலவிவருகிறது. ரஷ்யாவுடன் கைக்கோர்த்துள்ள சிரிய அரசு, கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பாலான பகுதியைக் கைப்பற்றியுள்ளது.
இதனிடையே, மனித உரிமை மீறல் காரணமாக சிரியா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளன. இதன் காரணமாக, 2018 அக்டோபருக்குப் பிறகு சிரியாவுக்குள் வரும் எண்ணெய் இறக்குமதி வெகுவாக குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக அந்நாட்டில் எண்ணெய் பற்றாக்குறை நிலவிவருகிறது.
இதையும் படிங்க : குடியுரிமை திருத்தச் சட்டம்: மலேசியாவை கண்டித்த இந்தியா!