சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸ் கிட்டத்தட்ட 180 நாடுகளில் பரவியுள்ளது. கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாக இத்தாலி, ஈரான், அமெரிக்கா ஆகியன இருந்துவந்தன.
தற்போது ஸ்பெயின் நாட்டிலும் இந்தக் கரோனா தொற்று கடுமையாக அதிகரித்துள்ளதால் அந்நாட்டில் உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதன்படி நேற்று ஒரேநாளில் மட்டும் 514 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளன.